தெற்கு பாக்தாத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய குண்டு தாக்குதலில் 20க்கும் அதிகமானோர் பலி

  • 24 நவம்பர் 2016

தெற்கு பாக்தாத்தில் உள்ள கிராமத்தில் நிகழ்ந்த குண்டு தாக்குதல் ஒன்றில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக இராக் பாதுகாப்புத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஆனால், இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று மற்ற சில தகவல்கள் கூறுகின்றன.

ஒரு எரிபொருள் நிலையம் அருகே வெடிகுண்டு நிரப்பிய லாரி ஒன்று வெடிக்க வைக்கப்பட்டது.

அந்த நிலையத்தில் தான் ஷியா முஸ்லிம் யாத்ரிகர்கள் பயன்படுத்தும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இறந்தவர்களில் கர்பாலா நகர் அருகே மத நிகழ்வு ஒன்றிலிருந்து திரும்பிய இரானிய பிரஜைகளும் அடங்குவார்கள்.

ஷியா முஸ்லிம்களை அடிக்கடி குறிவைத்து தாக்குதல் நடத்தும் ஐ.எஸ் குழு இந்த தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்