சீனாவின் ஷின்ஜியாங் பகுதி மக்களின் கடவுச்சீட்டுகள் பறிமுதல்

சீனாவின் மேற்கு பகுதியில், தொடர்ந்து அமைதியின்மை நிலவும், ஷின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள பொது மக்களின் கடவுச்சீட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடவுச்சீட்டுகள் பறிமுதல்

இது போன்ற கொள்கை திபெத்தியர்களுக்கும் பொருந்தும் எனக் கருதப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் மக்களின் நடமாட்டத்தின் மீது இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என ஆங்காங்கே செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த விவகாரம் தற்போது சீனாவின் தேசிய ஊடங்களிலும் செய்தியாக வெளியாகி வருகின்றது..

சமூக ஒழுங்கை பாதுகாப்பதுதான் இந்தக் கட்டுப்பாடுகளின் நோக்கம் என அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடவுச்சீட்டுகளைப் பாதுகாப்பாக வைப்பதை இந்த புதிய விதிமுறை உறுதி செய்யும் என போலிசார் கூறுகின்றனர்.

குடிமக்களின் சுதந்திரமான நடமாட்டத்தைத் தடை செய்யும் இந்த விதிமுறை ஒரு விதிமீறல் என்று மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.