சோமாலிய நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு

  • 25 நவம்பர் 2016

நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில், ஊழல் நடைபெறும் குற்றச்சாட்டுக்களை பெற்றிருப்பதாக சோமாலியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் நுர் ஃபாரா ஜிமெயில் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

Image caption சோமாலியா மிகவும் ஸ்திரமின்றி இருப்பதால், மிகுந்த செல்வாக்கு வாய்ந்த 14 ஆயிரம் பேரிடம் மட்டுமே வாக்கெடுக்கும் வகையில் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது

தேர்தல் நடைபெறும் பிரதேசங்களில் அச்சுறுத்தல் நடப்பதற்கும், அரசின் மூலவளங்களை தவறாக பயன்படுவதற்கும் சான்றுகளை பெற்றிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்த நாட்டில் தேசிய அளவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு இந்நாடு மிகவும் ஸ்திரமின்றி இருப்பதாக கருதப்படுவதால், மிகுந்த செல்வாக்கு வாய்ந்த 14 ஆயிரம் பேரிடம் மட்டுமே வாக்கெடுக்கும் வகையில் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்