சோமாலிய தலைநகரில் கார் குண்டு வெடித்ததில் குறைந்தது 8 பேர் பலி

சோமாலிய தலைநகர் மோகடிஷூவில் உள்ள பரபரப்பான சந்தைப்பகுதி ஒன்றில் கார் குண்டு ஒன்று வெடித்து சிதறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்த தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் பலியாகி உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருக்கும் என்று ஆம்புலென்ஸ் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

காய்கறி மற்றும் பிற உணவு பொருட்கள் விற்கப்பட்டு வந்த இந்த சந்தையும் தாக்குதலில் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

சோமாலியாவின் பிற பகுதிகளிலும் மற்றும் மோகடிஷூவிலும் இஸ்லாமியவாத குழுவான அல் ஷபாப் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்