கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க கொலையாத்தை எதிர்த்து நின்ற கியூப டேவிட் -- ஃபிடல் காஸ்ட்ரோ (காணொளி)

  • 26 நவம்பர் 2016

கியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90.

ஃபிடல் காஸ்ட்ரோ உலகில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ஒரு சர்வாதிகாரி.

அவரை ஒழித்துக் கட்ட அமெரிக்கா பல முறை முயன்றபோதும், காஸ்ட்ரோ ஒன்பது அமெரிக்க அதிபர்களைப் பார்த்துவிட்டார்.

அவர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து முள்ளாகவே இருந்தார் - அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர்.

அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஊழல் மிகுந்த பட்டிஸ்டா அரசை அகற்றவேண்டும் என்று காஸ்ட்ரோ திடமாக இருந்தார்.

காஸ்ட்ரோவும், அவரது சக புரட்சியாளர்களும் அவர்கள் ஒளிந்திருந்த மலைப் பகுதியிலிருந்து ஒரு இலக்கண சுத்தமான கெரில்லாப் போரை தொடங்கினர்.

1959ல் வெற்றி நாயகனாக காஸ்ட்ரோ தலைமையிலான படைகள் தலைநகர் ஹவானாவுக்குள் நுழைந்தன. பட்டிஸ்டா தப்பியோடினார். கியூபாவில் புதிய அரசு அமைந்த்து. அதில் புகழ்பெற்ற செகுவெராவும் பதவி வகித்தார்.

அது மக்களுக்கு அவர்களின் நிலங்களை திரும்பத் தருவதாக வாக்களித்தது. ஏழை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உறுதியளித்தது.

அதன் பிறகு காஸ்ட்ரோ, கியூபாவின் சக்தி மிக்க அண்டைநாடான அமெரிக்காவுக்குச் சென்று, நேசக்கரம் நீட்டினார்.

ஆனால் அமெரிக்க அதிபர் ஐஸன்ஹோவர் அவரை சந்திக்க மறுத்த நிலையில், தான் நிராகரிக்கப்பட்டது போல் காஸ்ட்ரோ உணர்ந்தார்.

அமெரிக்காவால் மூக்குடைபட்டதால், தான் சோவியத் ஒன்றியம் மற்றும் அதன் தலைவர் நிக்கிட்டா குருஷேவின் செல்வாக்கு வளையத்துக்குள் செல்ல நேரிட்ட்தாக அவர் கூறினார்.

கியூபா அந்த கட்டத்தில் சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவிய பனிப்போரின் ஒரு யுத்த களமாக மாறியது.

ஏப்ரல் 1961 பன்றிகள் குடா யுத்தம். இது கியூப புலம்பெயர்ந்த மக்களில் சிலரை ஒரு தனி ராணுவமாக ஆட்சேர்ப்பு செய்து அவர்களை கியூபாவிற்குள் ஊடுருவ வைத்து, காஸ்ட்ரோவை அகற்ற அமெரிக்கா எடுத்த தோல்வியில் முடிந்த முயற்சி.

ஆனால் இளம் புரட்சியாளரானா காஸ்ட்ரோ அந்த முயற்சியை முறியடித்தார்.

அதற்கு ஒரு ஆண்டுக்கு பின்னால் மேலும் பெரிய நெருக்கடி. அமெரிக்காவின் வேவு பார்க்கும் விமானங்கள் சோவியத் ஒன்றிய ஏவுகணைகள் கியூபாவை நோக்கி கொண்டு செல்லப்படுவதைக் கண்டன. உலகம் ஒரு அணு ஆயுதப் போரின் விளிம்பில் நின்றது.

இரு வல்லரசுகளும் நேருக்கு நேர் மோதல் நிலையில்.

ஆனால் இறுதியில் சோவியத் ஒன்றிய தலைவர் குருஷேவ்தான் முதலில் பணிந்தார். கியூபாவில் உள்ள ஏவுகணைகளை அங்கிருந்து அகற்றினார். அதற்கு மாறாக, துருக்கியில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஆயுதங்களை விலக்கிக்கொள்ள அமெரிக்கா ரகசியமாக ஒப்புக்கொண்டது.

ஆனால் இதன் விளைவு, காஸ்ட்ரோ அமெரிக்காவின் முதல் விரோதியானார். பல முறை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ அவரைப் படுகொலை செய்ய முயன்றது.

அவர் சிகார் புகைக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால், ஒரு முறை அவர் புகைக்கும் சிகாரில் கூட வெடிமருந்துகளை நிரப்பி அவரைக் கொல்ல முயன்றது சி.ஐ.ஏ. வேறு பல சதித்திட்டங்கள் இன்னும் விநோதமானவை.

ஒரு பவுடரைத் தயாரித்து அவரது முகத்தில் தடவி, அவர் தாடி முடி கொட்டிவிடுமாறு ஒரு திட்டம். இது நடந்தால் மக்கள் அவரை நோக்கி சிரிப்பார்கள் என்பது திட்டம்.

ஆனால் அமெரிக்கா கியுபாவுக்கு எதிரான சதியில் ஈடுபட்டிருந்த வேளையில், சோவியத் ஒன்றியம் கியூபாவிற்கு பண உதவியைக் கொட்டியது. கியூபாவில் உற்பத்தியாகும் கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையை சோவியத் ஒன்றியம் இறக்குமதி செய்த்து. சோவியத் ஒன்றியக் கப்பல்கள் ஹவானா துறைமுகத்தில் நங்கூரமிட்டபடியே இருந்தன. அமெரிக்க விதித்த பொருளாதரத் தடைகளால் கியுபா பாதிக்கப்படாமல் இருக்க , சோவியத் ஒன்றியம் அக்கப்பல்களில் பொருட்களை வழங்கி வந்த்து.

ஆனால் சோவியத் கம்யூனிசம் வீழ்ந்த போது கியூபப் பொருளாதாரமும் வீழ்ந்தது.

இந்த சின்ன்ஞ்சிறு நாடு பொருளாதார சரிவை எதிர்நோக்கியது. உணவுக்காக மக்கள் வரிசையில் நிற்க நேரிட்ட நிலையில், அவர்களின் கோபம் அதிகமானது.

1990களில் கியுப மக்கள் பலருக்கு காஸ்ட்ரோவின் கம்யூனிச ஆட்சி போதும் போதுமென்றாகிவிட்ட்து.

பல ஆயிரக்கணக்கான கியூபர்கள் ஆபத்தான படகுகளில் கடல் மூலம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்துக்கு தப்பியோடினர்.

அது பிடல் கேஸ்ட்ரோ மீது மக்கள் காட்டிய அவநம்பிக்கையின் அப்பட்டமான வெளிப்பாடு.

அந்த கியூப புலம்பெயர் மக்கள், காஸ்ட்ரோவின் ஆட்சியைக் குலைக்க பெரும் பிரயத்தனம் எடுத்தனர்.

ஆனாலும், கியுபாவில் தான் செய்த சாதனைகள் சிலவற்றுக்காக காஸ்ட்ரோ பெருமைப் படலாம்.

அனைவருக்கு இலவசமாக கிடைத்த உயர்தர மருத்துவ சேவைகள் , தொழில் வளம் பெற்ற நாடுகளுக்கு சமமாக எட்டப்பட்ட எழுத்தறிவு போன்றவை அவரது சாதனைகள்.

ஆனால் 2006ம் ஆண்டு, உடல் நலக்குறைவால் காஸ்ட்ரோ தனது சகோதரர் ரவூலுக்கு அதிகாரத்தைக் கையளிக்க நேர்ந்தது.

ரவூல் , அவரது அண்ணனின் சாதனைகளை கைவிடாமல், பல புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

அதிகாரத்தில் இல்லாத காஸ்ட்ரோ, உடல் ரீதியாக பலவீனமடைந்து, பொது வெளியில் அபூர்வமாகவே காணப்பட்டார். இப்படம் ஜனவரி 2014ல்.

அதன் பின்னர் அந்த ஆண்டு, அமெரிக்காவும் கியூபாவும் தங்கள் உறவுகளில் சுமுக நிலையை எட்ட முயற்சிகளைத் தொடங்கின.

ஃபிடல் காஸ்ட்ரோ 20 நூற்றாண்டின் ஒரு மாபெரும் தலைவராக விளங்கினார். அவரது தாக்கம் மெல்ல மெல்லத்தான் மறையும்.

பல கியூப பிரஜைகள் அவரை வெறுத்தாலும், பலர் அவரை மிகவும் நேசித்தனர். அமெரிக்கா என்ற கொலையாத்தை எதிர்த்த டேவிட் என்று அவரை அவர்கள் பார்த்தனர்.

அவர்களுக்கு காஸ்ட்ரோதான் கியூபா , கியுபாதான் கேஸ்ட்ரோ.

.