மியான்மார்: நாட்டு வெடிகுண்டுகளை வைத்ததாக 3 சந்தேக நபர்கள் கைது

  • 26 நவம்பர் 2016

பெரிய நகரமான யாங்கூனிலுள்ள உள்ளூர் அரசு அலுவலகங்களில் வெடித்திருக்கும் நாட்டு வெடிகுண்டுகளை வைத்த குற்றச்சாட்டின் கீழ் மூவரை மியான்மார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலையில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்புக்களில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

அனைவரும் முஸ்லிம்களாக இருக்கும் இந்த சந்தேக நபர்களுக்கும், ரக்ஹைன் மாநிலத்தில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் என்று அதிகாரிகள் கூறுவோருக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது.

தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், மியான்மார் ராணுவம் மேற்கொண்டு வருகின்ற கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு, ஏறக்குறைய 30 ஆயிரம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள், ரக்ஹைன் மாநிலத்தை விட்டு சமீபத்திய வாரங்களில் வெளியேறிவிட்டனர்.

நூற்றுக்கணக்கான குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், திட்டமிட்டு பாலியல் வல்லுறுவு மற்றும் சித்தரவதைகள் நடைபெற்றுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்