நாடாளுமன்ற அமைப்பை ஏற்றுகொண்ட முதல் வளைகுடா நாடான குவைத்தில் இன்று வாக்குப்பதிவு

குவைத்தில் நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இன்று முற்பகலில் வாக்களிக்க வந்தோரை விட மதியத்திற்கு பிறகு, வாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

வீழ்ச்சியடைந்து வருகின்ற எண்ணெய் வருவாயை நாடு சமாளிக்க உதவும் வகையில், மேலும் சிக்கன நடவடிக்கைகளை கொண்டுவர புதிய நாடாளுமன்றம் சிக்கன நடவடிக்கைகளை எடுக்கும் என்று அரசு நம்புகிறது.

தேர்தல் பிரசாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலை புறக்கணித்த எதிர்க்கட்சிகள், புதிய உத்வேகத்துடன் அரசியலுக்கு திரும்பியுள்ளன.

வரலாற்றிலேயே முதல் முறையாக 22 பெண் அரசு வழக்கறிஞர்கள் இந்த தேர்தலை மேற்பார்வையிடுகின்றனர்.

நாடாளுமன்ற அமைப்பை 1962 ஆம் ஆண்டு முதல்முறையாக ஏற்றுக்கொண்ட முதல் வளைகுடா நாடு குவைத் ஆகும்.

சமீபத்தில் பெட்ரோல் மானியங்களை அரசு குறைத்திருப்பதால், விலைவாசி 80 விழுக்காடு உயர்வு அடைதிருக்கிறது.

தேர்தல் வாக்கெடுக்கு இந்திய நேரப்படி இரவு பத்தரை (1030) மணிக்கு நிறைவடையும்.

தொடர்புடைய தலைப்புகள்