துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது ரசாயன ஏவுகணை வீச்சு, 22 பேர் காயம்

படத்தின் காப்புரிமை Reuters

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ரசாயன ராக்கெட் வீச்சில், சிரியாவின் வட பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்கள் 22 பேர் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாக துருக்கி ராணுவம் தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption துருக்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்து செல்லப்படும் காயமுற்றோர்

கலிலியா கிராமத்திற்கு அருகில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது இந்த ரசாயன வாயு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ராணுவத்தை மேற்கோள் காட்டி துருக்கி அரசு நடத்துகின்ற அனடோலியா செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது. ஆனால், எப்போது நடைபெற்றது என்று தெரிவிக்கப்படவில்லை.

படத்தின் காப்புரிமை AP
Image caption துருக்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்து செல்லப்படும் காயமுற்றோர்

ரசாயன வாயு தாக்குதலால் காயடைந்த கிளர்ச்சியாளர்கள், ரசாயன வாயுவிலிருந்து பாதுகாக்கும் ஆடைகள் அணிந்த அவசரகால உதவி பணியாளர்களால், எல்லை கடந்து துருக்கியிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எல்லை பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு சமீபத்தில் கிடைத்த முன்னேற்றங்களுக்கு பிறகு, ஜிகாதி ஆயதப்படையினரால் இப்போது அவர்கள் கடும் எதிர்ப்பை சந்திப்பதாக தோன்றுகிறது.