அலெப்போவின் ஒரு மாவட்டத்தை சிரியா அரசு படை கைப்பற்றியது

அலெப்போ நகரின் கிழக்கே இருக்கும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டம் ஒன்றை சிரியா அரசு படைப்பரிவுகள் முதன்முதலாக மீண்டும் கைப்பற்றிய பிறகு, நூற்றுக்கணக்கான குடிமக்கள் தப்பியோடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அல்-ஷார் மாவட்டத்தில் தீவிர மோதல்கள்

ஹனானோ மாவட்டம் அரசின் கட்டுப்பாட்டில் சென்றிருப்பதை உறுதி செய்துள்ள கிளர்ச்சியாளர்களின் வட்டாரங்கள், குடிமக்களில் சிலர் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பிற பகுதிகளுக்கு தப்பியோடியுள்ள நிலையில், ஏனையோர் அரசின் கையில் தங்களை ஒப்புவித்துள்ளதாகக் கூறின.

2012 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களின் கைப்பற்றிய முதல் மாவட்டம் ஹனானோ ஆகும்.

படத்தின் காப்புரிமை Reuters

கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கின்ற இந்த நகரத்தின் பகுதியை பாதியாக குறைத்துவிடும் முயற்சியோடு அரசு படைப்பரிவுகள், அதன் கிழக்குப்புற பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்