மத்திய வலது சாரி அதிபர் வேட்பாளர் யார்? பிரான்ஸில் இன்று பலப்பரிட்சை

  • 27 நவம்பர் 2016

அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற அதிபர் தேர்தலுக்கு, மத்திய வலது சாரி அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக, பிரான்ஸில் நடைபெறும் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் அதிகமானோர் வாக்களிக்கலாம் என்று தேர்தலுக்கு முன்பாகவே எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption பிரான்சுவா ஃபியோங், இந்த போட்டியில் வெற்றி பெறுபவராக பார்க்கப்படுகிறார்

இரண்டு முன்னாள் பிரதமர்களான பிரான்சுவா ஃபியோங் மற்றும் அலாங் யுபே ஆகிய இருவரும் போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர்.

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முதல் சுற்றில் மிக எளிதான வெற்றியை பெற்ற ஃபியோங், இந்த போட்டியில் வெற்றி பெறுபவராக பார்க்கப்படுகிறார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஃபியோங்கின் முற்போக்கான தீர்திருத்த திட்டங்கள் கொடூரமானவை - அலாங் யுபே

ஆனால் ஃபியோங் மிகவும் வலது சாரியாக இருப்பதாக மத்திய மற்றும் இடது சாரி உறுப்பினர்கள் கருதுவதாகவும், இந்த வாக்கெடுப்பில் வெற்றிபெறுகின்ற வேட்பாளர், அடுத்த வசந்தகாலத்தில் நடைபெறும் அதிபர் தேர்தலில் தீவிர வலது தேசிய முன்னணி தலைவர் மர்ரீன் ல பென்னுடன் மோதலாம் என்கிற நிலையில், குறைவான வெற்றி வாய்ப்பே இருப்பதாக கருதுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஃபியோங்கின் முற்போக்கான தீர்திருத்த திட்டங்கள் கொடூரமானவை என்று அலாங் யுபே தாக்கி பேசியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்