உகாண்டாவில் ஆயுதக்குழுவினர், பாதுகாப்பு படையினர் இடையே நடந்த மோதலில் 55 பேர் பலி

  • 27 நவம்பர் 2016

உகாண்டாவின் மேற்குப் பகுதியில் தனி மாநிலம் உருவாக்கக் கோரி போராடிவரும் புதிய ஆயுதக்குழுவினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சுமார் 55 பேர் கொல்லப்பட்டிருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

வன்முறையைத் தூண்டியதாகக் கூறி உள்ளூர் பழங்குடியின அரசர் சார்லஸ் வெஸ்லே மும்பரேவை போலிசார் கைது செய்துள்ளார்.

ஆனால் தான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.

காங்கோ ஜனநாயகக் குடியரசுடனான எல்லைப்பகுதிக்கு அருகே இருக்கும் கசசி நகரில் உள்ள அரச மாளிகையில் தாக்குதல் நடத்திய பல போராளிகளை கைது செய்தததாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

உகாண்டா அரசாங்கம் மற்றும் அந்த பிராந்தியத்தின் பெரிய டோரோ ராஜ்ஜியத்துடன் இந்த சின்ன ராஜ்ஜியமானது பதற்றம் நிறைந்த நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்