அமெரிக்க டாலருக்கு இணையான புதிய 'பத்திரத் தாள்' நாணயம் - ஜிம்பாப்வேவில்

உயர் பணவீக்கம் காரணமாக ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் உள்நாட்டு டாலர் நோட்டுக்களை ஜிம்பாப்வே கைவிட்ட நிலையில், இன்று புதிய தேசிய நாணயத்தை அறிமுகம் செய்யும் பணியை அந்நாடு தொடங்க உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்த நாணயங்கள் பத்திர தாள்கள் என்றழைக்கப்படுகின்றன.

அமெரிக்க டாலருக்கு இணையான மதிப்பை கொண்ட இவை மத்திய வங்கியால் வழங்கப்பட உள்ளன.

சந்தையில் பணநோட்டுகள் குவிவதைத் தவிர்ப்பதற்காக இந்த தாள்கள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் வழங்கப்பட உள்ளன.

இந்த நாணயமானது பெரும்பாலான வர்த்தக குழுக்களின் ஆதரவை பெற்றுள்ளது.

ஆனால், பொதுமக்களிடம் பரவலான எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

சமீப ஆண்டுகளில், அமெரிக்க டாலர் மற்றும் பிற சர்வதேச நாணயங்களை சட்டப்பூர்வ நாணயங்களாக ஜிம்பாவே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்