பிரான்ஸ்: மத்திய-வலது சாரி குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக பிரான்சுவா ஃபியோங் தேர்வு

படத்தின் காப்புரிமை Reuters
Image caption முன்னாள் பிரதமரான ஆலாங் யுபேயை (இடது) பெரும் வாக்கு வித்தியாசத்தில் பிரான்சுவா ஃபியோங் (வலது) தேற்கடித்திருக்கிறார்

அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் பிரான்ஸில் பெரும் மாற்றங்களை கொண்டுவர போவதாக மத்திய-வலது சாரி குடியரசு குடியரசு கட்சியின் புதிய தலைவர் பிரான்சுவா ஃபியோங் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரான்ஸின் இந்திய பெருங்கடல் தீவான லா ரியூனியனில் இந்து கோயிலை பார்வையிட்ட மர்ரீன் ல பென்

இன்னொரு முன்னாள் பிரதமரான ஆலாங் யுபேயை பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஃபியோங் தேற்கடித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption வால்ஸ் (வலது) அதிபர் பிரான்சுவா ஒலாந்த்-துக்கு (வலது) எதிராக போட்டியிடுவாரா?

ஆரவாரித்த ஆதரவார்களின் கூட்டத்தில் பேசிய ஃபியோங், நாட்டின் செயல்பாட்டு மனோபாவத்தை முழுமையாக மாற்றி, மறுபடியும் செயல்பட தொடங்குவது அவசியமாகிறது என்று தெரிவித்தார். தையை தளர்த்துவது உள்பட இறுக்கமற்ற பொருளாதார திட்டங்களோடு அதிபர் வேட்பாளர் நியமனத்தை பெற்றிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சுயேட்சை வேட்பாளர் நிற்கும் அதிபர் பிரான்சுவாவின் முன்னாள் அமைச்சர் இம்மானுவேல் மக்ரான்

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில், , இன்னும் கட்சியின் நியமனம் பெறவிருக்கின்ற சோஷலிஸ்ட் வேட்பாளர் மற்றும், தீவிர வலது சாரி அதிபர் வேட்பாளர் மர்ரீன் ல பென்னுடன், நடைபெறும் போட்டியில் பிரான்சுவா ஃபியோங் மோதவிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்