ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுதந்திர கட்சிக்கு ஓராண்டில் மூன்றாவது தலைவர்

  • 28 நவம்பர் 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பிரசாரம் மேற்கொண்ட ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுதந்திர கட்சி, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக, அதனுடைய புதிய தலைவராக பால் நட்டாலை தெரிவு செய்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வெளியேறும் தலைவர் நிகெல் ஃபராஜ்-உடன் பால் நட்டால் (இடது)

பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வாக்களித்திருந்தாலும், அந்த ஒன்றியத்திடம் இருந்து உண்மையிலேயே விலகுவதை உத்தரவாதம் செய்ய வேண்டிய வலுவான கடமை இந்த கட்சிக்கு இருப்பதாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பால் நட்டால் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

ஜூன் மாதம் நடைபெற்ற இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பின்னர், தலைவர் ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில நாட்களுக்குள் ராஜினாமா செய்ததும், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திற்குள் இருந்த இந்த கட்சியின் முன்னிலை தலைவர்கள் ஒருவரையொருவர் மாறிமாறி தாக்கிக்கொண்டதும் இந்த கட்சியை மிகவும் குழப்பங்களுக்குள் தள்ளியது.

தொடர்புடைய தலைப்புகள்