ஒஹையோ பல்கலைக்கழக தாக்குதல் தீவிரவாதத் தாக்குதலா? அமெரிக்க போலிசார் விசாரணை

  • 29 நவம்பர் 2016

ஒஹையோ மாநில பல்கலைக்கழக மாணவர் நடத்திய தாக்குதல் ஒரு தீவிரவாதத் தாக்குதலா என அமெரிக்க போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AP

சோமாலிய வம்சாவளியைச் சேர்ந்த அப்துல் ரசாக் அலி அர்த்தன் என்பவர் ஒரு காரை நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது ஓட்டிச் சென்றார். பின்னர் ஒரு பெரிய கத்தியால் வழிப்போக்கர்களையும் தாக்கினார்.

இந்த தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்தப் பகுதியில் இருந்த ஒரு போலிஸ் அதிகாரி அவரை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவத்தை அடுத்து மூடப்பட்டிருந்த ஒஹையோ மாநில பல்கலைக்கழக வளாகம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

காயமுற்றவர்கள் மருத்துவமனையில் ஸ்திரமான நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.