’கடலில் பயணிப்பவர்களுக்கு வரும் ஸ்கர்வி தற்போது பொதுவான நோயாக மாறிவிட்டது’

  • 29 நவம்பர் 2016

மோசமான மற்றும் நவீன உணவு பழக்கங்களே ஸ்கர்வி நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என ஆஸ்திரேலியா மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

"விட்டமின் சி" யின் நாள்பட்ட குறைப்பாடால் ஏற்படும் ஸ்கர்வி நோய், சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏழு நீரிழிவு நோயாளிகளிடம் கண்டறியப்பட்டுள்ளது

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முயற்சித்து பலர் பழங்களை தவிர்த்து வந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

காய்கறிகளை அதிகமாக சமைப்பதும் விட்டமின் சி குறைபாட்டு காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

கடலில் இருக்கும் மாலுமிகளை தாக்கும் இந்த ஸ்கர்வி நோய் கடைசியாக பல மேற்கத்திய நாடுகளுக்கு மறுபிரவேசம் செய்திருக்கிறது.

இந்த நோய் ஏற்பட்டால் ஈறுகளில் வீக்கம் மற்றும் மூட்டு இணைப்புகளில் வலி ஏற்படும். மேலும் இதற்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் பற்களில் சீழ் மற்றும் அபாயகரமான இதய சிக்கல்கள் ஆகியவற்றிற்கு வித்திடும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வரலாற்று ரீதியாக ஸ்கர்வி நோய் கடலில் பயணம் செய்பவர்களை மட்டுமே பாதிக்கும் என கருதப்படுகிறது

ஸ்கர்வி என்றால் என்ன?

  • விட்டமின் சி இல்லாமல் தோல், ரத்தக் குழாய்கள் மற்றும் குருத்தெலும்பு ஆகியவற்றிற்கு தேவையான கொலாஜென் என்னும் பொருளை உருவாக்க முடியாது.
  • இதன் அறிகுறிகள்; அனைத்து நேரமும் அசதியாக உணர்வது, பசியின்மை, மூட்டு இணைப்புகளில் வலி, மூச்சுத் திணறல் மற்றும் எளிதாக காயமடையக்கூடிய சருமம்.
  • இந்த நோய் சத்தான உணவுப் பழக்கங்கள் இல்லாமை, மற்றும் குறுகிய காலத்தில் உடல் எடையை குறைப்பதற்கான உணவு பழக்கம், வீடற்றவர்கள், முதியவர்கள் மற்றும் உண்பதில் குறைபாடுடையவர்கள் ஆகியோருக்கு வரலாம்.
  • ஆரஞ்சுகள், எலுமிச்சை, ஸ்டிராபெர்ரி ஆகிய பழங்களில் விட்டமின் சி அதிக அளவில் உள்ளது; மேலும் ப்ரோக்கோலி, முட்டை கோஸ் மற்றும் ஆஸ்பேரகஸ் ஆகியவற்றிலும் விட்டமின் சி நிறைந்துள்ளது.