மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு மரியாதை: ஹவானாவில் மிகப் பெரிய பேரணி

  • 30 நவம்பர் 2016

கடந்த வெள்ளிக்கிழமை தனது 90-வது வயதில் காலமான கியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு மரியாதை செய்யும் வகையில் ஒரு மிகப் பெரிய பேரணி தற்போது கியூபாவின் தலைநகர் ஹவானாவில் நடந்து கொண்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஹவானா புரட்சி சதுக்கத்தில் பேரணி

ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் மற்ற புரட்சிகர தலைவர்களின் போராட்டங்களை விளக்கும் பழைய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டும், கியூபாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டும் இந்த பேரணி நிகழ்வு தொடங்கியது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் பொலிவியா அதிபர் ஈவோ மொராலெஸ் ஆகியோர் உள்ளிட்ட உலக மற்றும் பிராந்திய தலைவர்கள், இந்த பேரணி நிகழ்வுக்காக ஹவானாவில் உள்ள புரட்சி சதுக்கத்தில் பல ஆயிரக்கணக்கான கியூபா மக்களுடன் இணைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஃபிடல் காஸ்ட்ரோ

ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சிக்காலத்தில் கியூபாவில் நிலவிய சர்ச்சைக்குரிய அரசியல் மற்றும் மனித உரிமை செயல்பாடுகள் காரணமாக அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, பல மேலை நாடுகளும் தங்களின் கீழ் நிலை அதிகாரிகளையே கியூபாவுக்கு அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்