கொலம்பிய அரசு - ஃபார்க் குழு இடையேயான புதிய உடன்படிக்கைக்கு அந்நாட்டின் மேலவை ஒப்புதல்

அரை நூற்றாண்டாக கொலம்பிய அரசுக்கும், ஃபார்க் கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே நடந்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் திருத்தியமைக்கப்பட்ட புதிய அமைதி உடன்படிக்கைக்கு கொலம்பிய நாடாளுமன்றத்தின் மேலவை ஒப்புதல் அளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption புதிய உடன்படிக்கையின் ஆதரவாளர்

முதல் கையெழுத்தான உடன்படிக்கையை கடந்த மாதத்தில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பொதுமக்கள் நிராகரித்தனர்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய உடன்படிக்கை முன்பிருந்ததை விட பலம் வாய்ந்தது என்றும், தனது அரசியல் எதிராளிகள் கோரிய மாற்றங்களையும் இது உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ளது என்று கொலம்பிய அதிபர் ஜுவான் மானுவெல் சான்டோஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால்,இதுவும், ஃபார்க் கிளர்ச்சிக் குழு தலைவர்கள் மீது சலுகை காட்டும் நோக்கில் அதிகக் கருணை காட்டுவதாக இருப்பதாக முன்னாள் கொலம்பிய அதிபரான அல்வாரோ ஊர்பே தலைமையிலான எதிர்க்கட்சி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

தற்போது இந்த புதிய உடன்படிக்கை கொலம்பிய நாடாளுமன்றத்தின் கீழவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது.