கொலம்பிய அரசு - ஃபார்க் குழு இடையேயான புதிய உடன்படிக்கைக்கு அந்நாட்டின் பிரதிநிதிகள் அவை ஒப்புதல்

  • 1 டிசம்பர் 2016

அரை நூற்றாண்டாக கொலம்பிய அரசுக்கும், ஃபார்க் கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே நடந்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் திருத்தியமைக்கப்பட்ட புதிய அமைதி உடன்படிக்கைக்கு கொலம்பியாவின் பிரதிநிதிகள் அவை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption புதிய உடன்படிக்கையின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள்

நேற்று இந்த திருத்தியமைக்கப்பட்ட புதிய அமைதி உடன்படிக்கைக்கு மிகப் பெரிய வித்தியாசத்தில் கொலம்பிய செனட் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

கொலம்பிய அரசுக்கும், ஃபார்க் கிளர்ச்சிக் குழு இடையே கையெழுத்தான முதல் உடன்படிக்கை கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்த ஒரு கருத்தறியும் வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption புதிய உடன்படிக்கையின் ஆதரவாளர்

கியூபா தலைநகர் ஹவானாவில் இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முதல் உடன்படிக்கை திருத்தியமைக்கப்பட்டது.

இந்த புதிய அமைதி உடன்படிக்கைக்கு கொலம்பியாவின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால், அதற்கு பிறகு 5 நாட்களுக்குள் காடுகளில் முகாம்களில் உள்ள ஃபார்க் போராளிகள், தங்களின் ஆயுதங்களை ஒப்படைக்க அவர்களை வேறு மண்டலங்களுக்கு மாற்றும் நடவடிக்கையை அரசு தொடங்கும் என்று கொலம்பிய அதிபர் ஜுவான் மானுவெல் சான்டோஸ் தெரிவித்துள்ளார்.