தெய்வத்தின் உதவியுடன் தேர்தலில் வெல்வேன் – காம்பியா அதிபர்

மேற்கு ஆப்ரிக்க நாடான காம்பியாவில் இன்று அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption யாக்யா ஜமே

தெய்வத்தின் உதவியுடன் தான் அதிபர் தேர்தலில் வெல்வது உறுதி என்று காம்பியாவின் தற்போதைய அதிபரான யாக்யா ஜமே தெரிவித்துள்ளார்.

கடந்த 1994-ஆம் ஆண்டில் நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியால், காம்பியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய ஜமே, 'அல்லா' (இறைவன்) விருப்பப்பட்டால் தன்னால் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு கூட ஆட்சிப் பொறுப்பில் இருக்க முடியும் என்று தெரிவித்தார்.

ஐந்தாவது முறையாக அதிபர் வேட்பாளராகவுள்ள ஜமே, யாராலும் தேர்தலில் முறைகேடு செய்ய முடியாது என்பதால் , தான் தேர்தலுக்கு பிறகு தான் ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்வதாகக் கூறினார்.

எட்டு கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியை சேர்ந்த அரசியலில் புதுவரவும், முன்னாள் ரியல் எஸ்டேட் முகவருமான அடாமா பாரோ அதிபர் தேர்தலில் ஜமேவுக்கு பிரதான போட்டியாளராக உள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்