சீனாவில் சொகுசு கார்களுக்கு இன்றுமுதல் கூடுதலாக 10 சதவிகிதம் வரி விதிப்பு

  • 1 டிசம்பர் 2016

சீனாவில் விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கு கூடுதலாக 10 சதவிகித வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது.

படத்தின் காப்புரிமை Lintao Zhang
Image caption சீனாவில் சொகுசு கார்களுக்கு இன்றுமுதல் கூடுதலாக 10 சதவிகிதம் வரி விதிப்பு

1.90 லட்சம் டாலர்களுக்கு மேல் விலையுள்ள கார்களை மட்டுமே பாதிக்கும் இந்த வரி விதிப்பு நடவடிக்கை தாராளமாக செலவு செய்வதை கட்டுப்படுத்தவும், மாசைக் குறைக்கும் நோக்கிலும் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தங்கள் செல்வத்தை காட்டும் ஆடம்பர செலவுகளைச் செய்வதை ஊக்குவிக்காமல் செய்யும் சீன அதிகாரிகளின் நடவடிக்கையின் ஒரு பரந்த முயற்சியின் ஒரு அங்கமாக இந்த வரி விதிப்பு பார்க்கப்படுவதாக செய்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், பெரும் பணக்காரர்களுக்கு இந்த வரி விதிப்பு ஒரு பெரும் தடையாக இருக்காது என்று கருதப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்