அசர்பைஜான்: இணையத்தில் அதிபரை இழிவுபடுத்தும் கருத்தை தெரிவித்தால் சட்டப்படி குற்றம்

அசர்பைஜானில் அதிபர் இல்-ஹம்-அல்லி-யே யை சமூக ஊடகங்களில் இழிவுபடுத்துவது, குற்றவியல் குற்றம் என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அசர்பைஜான் அதிபர் இல் ஹம்அல்லியே(கோப்புப் படம்)

அந்த புதிய சட்டம் மூன்று வருடம் வரை சிறை தண்டனை அல்லது பெரிய தொகை அபராதம் என அதிகப்படியான தண்டைகளை கொண்டுள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன், இணையத்தில் அவதூறு செய்திகளை பதிவிடுவது குற்றம் என்று கொண்டு வரப்பட்ட சட்டவரைவை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதில் அதிபர் அல்லி யேயின் பெயர் குறிப்பாக சொல்லப்படவில்லை.

அசர்பைஜானின் பாரம்பரிய ஊடகங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளதால் நாட்டின் தடுமாறும் பொருளாதாரத்தை விமர்சிக்கவும் அல்லி யேயின் ஆட்சியை விமர்சிக்கவும் சமூக ஊடகங்களை மக்கள் பயன் படுத்துவதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.