2025-க்குள் டீசல் வாகனங்களை ஒழிக்கப் போவதாக 4 நகரங்களின் மேயர்கள் அறிவிப்பு

  • 2 டிசம்பர் 2016

டீசலால் ஓடுகின்ற கார்கள் மற்றும் லாரிகள் அனைத்தையும் 2025 ஆம் ஆண்டுக்குள் ஒழித்துவிட போவதாக உலகின் நான்கு மிக முக்கிய நகரங்களின் மேயர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாரிஸில் நிலவும் காற்று தரம், டீசலை பயன்பாட்டில் அரசியல் தலைவர்கள் கடும் நிலைப்பாடுகளை எடுக்க வைத்திருக்கிறது

ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் இறப்புக்களுக்கு காரணமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கும் காற்றின் மோசமான மாசடைந்த தரத்தை மேம்படுத்துவதற்காக, இதனை செயல்படுத்த விரும்புவதாக பாரிஸ், மெக்ஸிகோ சிட்டி, மாட்ரிட் மற்றும் அதென்ஸ் நகர மேயர்கள் கூறியுள்ளனர்.

மெக்ஸிகோவில் நடைபெற்ற உலக நாடுகளின் நகர தலைவர்களின் கூட்டத்தில் அவர்கள் இதனை அறிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வேக கட்டுபாட்டை அறிமுகப்படுத்தியிருக்கும் மாட்ரிட், 2025 ஆம் ஆண்டிலிருந்து டீசல் வாகனங்களை தடை செய்ய இருக்கிறது

டீசல் இயந்திரங்களில் இருந்து வெளியேறுகின்ற நுண் துகள்கள் மக்களின் நுரையீரலுக்குள் சென்று சுவாசக் குழாய் மற்றும் இதய நோய்கள் ஏற்பட்ட காரணமாகின்றன.

டீசல் கார்களை மின்சார, ஹைட்ரஜன் மற்றும் கலவை எரிபொருட்களால் இயக்குவதாக மாற்றுவதற்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று இந்த மேயர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்