அமெரிக்காவில் வேலையில்லா சதவிகிதம் 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல்

அமெரிக்காவில் வேலையில்லா சதவிகிதம் என்பது ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் 4.6 சதவிகிதத்திற்கு குறைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்காவில் வேலையில்லா சதவீதம் 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல்

இதன் காரணமாக இந்த மாதம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் சுமார் 1,78,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவார் என்பதை இந்த புள்ளி விவரங்கள் காட்டுவதாக வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்