அமெரிக்காவுக்கு இடம் ஒதுக்கியதால் சீனாவிலுள்ள தென் கொரியாவின் பிரபல நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை

  • 2 டிசம்பர் 2016

சீனாவில் உள்ள லோட்டே என்ற தென் கொரிய நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஒரு விரிவான விசாரணையை அந்நாட்டு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்காவுக்கு இடம் ஒதுக்கியதால் சீனாவிலுள்ள தென் கொரியாவின் பிரபல லோட்டே குழும நிறுவனங்களில் சோதனை

தென் கொரியா அரசாங்கத்துடன் அந்த நிறுவனம் மேற்கொண்ட நிலம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றைத் தொடர்ந்து சில வாரங்களில் இந்த விசாரணையானது தொடங்கியுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க ஏவுகணை தடுப்பு அமைப்பு முறை ஒன்றை தென் கொரிய மண்ணில் நிறுவ அனுமதிக்கிறது.

இந்த விசாரணையானது, சீனாவில் உள்ள டஜன் கணக்கான லோட்டே பல்பொருள் அங்காடிகளில் ஒரே நேரத்தில் வரி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் குறித்த சோதனைகளும் அடங்கும். மேலும், அதன் ரசாயனம் மற்றும் இனிப்பு தொழிற்சாலை செயல்பாடுகள் குறித்த சோதனைகளும் இதில் அடங்கும்.

தென்கொரியாவில் ஏவுகணை தடுப்பு அமைப்பு நிர்மாணிக்கப்பட்டால் அது பதற்றத்தை அதிகரிக்கும் என்று சீனாவின் வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்