டமாஸ்கஸின் புறநகரில் கிளர்ச்சியாளர்களை அகற்ற அரசுடன் ஒப்பந்தம்

சிரியா அரசோடு எட்டப்பட்டுள்ள சமீபத்திய ஒப்பந்தத்தால் தலைநகரான டமாஸ்கஸின் ஒரு புறநகரிலுள்ள பல நூறு கிளர்ச்சியாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

அல்-தாலில் இருந்து 400 ஆயுதப்படையினரும், அவர்களின் குடும்பத்தினரும் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் இட்லிப் மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை நல்லிணக்க ஒப்பந்தங்களாக அரசு விவரித்திருக்கும் நிலையில், பின்னடைவான ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் தோல்வியை ஏற்றுக்கொண்டதாக கிளர்ச்சியாளர்கள் இதனை பார்க்கின்றனர்.

அதிபர் அசாத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த கிளர்ச்சியாளர்களை டமாஸ்கஸை சுற்றியிருக்கும் பகுதிகளில் இருந்து அகற்றிவிடும் அரசின் போர் தந்திர உத்தியின் ஒரு பகுதியாகும்.

தொடர்புடைய தலைப்புகள்