கிழக்கு அலெப்போவில் இருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேற மறுப்பு

கிழக்கு அலெப்போவில் உள்ள கிளர்ச்சியாளர்கள் படையினர் சிரியா அரசாங்கம் மற்றும் அதன் ஆதரவு படைகளிடம் இருந்து தொடர்ந்து தாக்குதலை எதிர்கொண்டு வந்தாலும் தாங்கள் சரணடைய மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய கிளர்ச்சியாளர் குழுக்களில் ஒரு குழுவின் செய்தி தொடர்பாளர், பொதுமக்கள் வெளியேற பாதுகாப்பான பாதைகளைத் திறந்து வைப்பதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஆனால் தாங்கள் அந்த நகரத்தை விட்டு தன்னிச்சையாக வெளியேறப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

அரசு படைகள், கடுமையான மோதல்கள் மூலம் எதிர்ப்பாளர்களிடம் இருந்து பல பிரதேசங்களை மீட்டுள்ளது என்றும் தாரிக் அல் பாப் பகுதியை மீண்டும் கைப்பற்றிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

2012 முதல் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அலெப்போவின் கிழக்கு பகுதியில் 60 சதவீதத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அரச படையினர் தெரிவித்துள்ளனர்.

அலெப்போவில் இருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவது தொடர்பாக, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்ற ரஷியா தெரிவித்துள்ளது.