அலெப்போ : போராளிகள் வசமிருந்து மேலும் ஒரு மாவட்டத்தை சிரியா அரசு படை கைப்பற்றியது

கிழக்கு அலெப்போவில் போராளிகள் வசமிருந்த மற்றொரு மாவட்டத்தை சிரியா அரசு படைகள் மற்றும் அதன் கூட்டணி படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அலெப்போ : போராளிகள் வசமிருந்து மேலும் ஒரு மாவட்டத்தை சிரியா அரசு படை கைப்பற்றியது

நகரின் கிழக்கு பகுதியில் இரவில் நடத்தப்பட்ட கடுமையான ஷெல் குண்டு தாக்குதல்களை தொடர்ந்து தரிக் அல்-பாப் நகர் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தற்போது, அலெப்போ நகரின் வட பகுதியையும் மற்றும் நகரின் முக்கிய விமான தளத்தையும் இணைக்கும் ஒரு நேரடி பாதையானது அரசாங்க படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அலெப்போவில் போராளிகள் வசமிருந்த சுமார் 60 சதவிகித பகுதிகள் தற்போது அரசாங்க படையினரின் வசம் வீழ்ந்துள்ளது.

அரசாங்க படையினர் கட்டுப்பாட்டில் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொடர்ந்து தப்பியோடி வருகின்றனர்.

ஒரு பிரம்மாண்ட பொதுமக்கள் வெளியேற்றத்திற்கு தொண்டு நிறுவனங்கள் தயாராகி வருவதாக அலெப்போவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்