சீனாவுக்கு எதிராக செயல்பட்டதால், ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய முயற்சி

  • 3 டிசம்பர் 2016

ஹங்காங்கில் ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டது செல்லாது என்று கூறி, நாதன் லா, எட்வர்ட் இயு, லாவ் சியு-லாய், லியுங் வோக் ஆகியோருக்கு எதிராக சட்ட நடைமுறைகளை ஹாங்காங் அரசு தொடங்கியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நாதன் லா (இடது), எட்வர்ட் இயு, லாவ் சியு-லாய் மூவரும் தகுதியிழப்பை சந்திக்கலாம்

இவ்வாறு பதவி பிரமாணம் ஏடுத்தபோது சீனாவை கேலிக்குள்ளாக்கிய சுதந்திர ஆதரவு அரசியில்வாதிகள் இருவர் சீனாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், இந்த முயற்சியை ஹாங்காங் தொடங்கியிருக்கிறது.

இந்த முயற்சி, அரசியல் ரீதியாக தூண்டப்பட்டதாக விமர்சகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இருப்பனும், இந்த முயற்சிகள், முற்றிலும் சட்டப்பூர்வ மற்றும் அமலாக்க அம்சங்களை அடிப்படையாக கொண்டவை என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இவர்களில், நாதன் லா, எட்வர்ட் இயு, லாவ் சியு-லாய் மூவரும் "அம்ரெல்லா போராட்டங்கள்" என்று அறியப்படும் ஹாங்காங்கில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களுக்கு பின்னர், கடந்த செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்களாவார்கள்.

"எல்லா ஜனநாயக ஆதரவாளர்கள் மற்றும் ஜனநாயகத்தை ஆதரித்து வாக்களித்த அனைவர் மீதும் ஒருங்கிணைந்து தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்" இதுவென நாதன் லா இதனை பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்,

அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரிய ஒன்றாக பலராலும் பார்க்கப்படுகிறது.

யாவ் வெய்-சிங் மற்றும் சிக்ஸ்துஸ் வியுங் இருவர் மீதும் கடந்த அக்டோபர் மாதம் அரசு வழக்கு தொடுத்தது.

இத்தகைய நடவடிக்கை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை தகுதிநீக்கம் செய்ய இதற்கு முன்னர் நிகழ்ந்திராத நடவடிக்கையாகும்.

நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்தபோது, யாவ் வெய்-சிங்கும் சிக்ஸ்துஸ் வியுங்கும் சத்திய வாக்குகளை தெரிவித்து, சீனாவுக்கு எதிராக தரக்குறைவான சொற்களை பயன்படுத்தியதால் அவர்களின் உறுதிமொழி செல்லாது என்றும் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அரசு கூறுகிறது.

இந்த வழக்கில் பொது மக்கள் கலவையாக மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர்.

பலர் அரசின் தலையீடு தொடர்பாக கடும் விமர்சனம் செய்கின்றனர். பிறர், இந்த இரு நபர்களின் செயல்பாட்டில் கோபம் அடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption யாவ் வெய்-சிங் மற்றும் சிக்ஸ்துஸ் வியுங் இருவரும் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று லட்சக்கணக்கான சீன ஆதரவு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர் மீது அரசு எடுக்கிற சமீபத்திய நடவடிக்கையை பலரும் விரும்பவில்லை. இநத நால்வரையும் தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக மக்கள் எண்ணுகின்றனர்.

இந்த நால்வரும் பதவிப் பிரமாணம் எடுத்திருப்பது சர்ச்சைக்குரியதாக பலராலும் கருதப்படவில்லை. ஹாங்காங் நாடாளுமன்ற சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அவர்களை இருக்க அனுமதித்திருக்கிறார்.

இந்த நால்வரும் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்களில் மிகவும் மிதமானவர்களாக கருதப்படுகின்றனர்.

ஹாங்காங், சீனாவிடம் இருந்து சுதந்திரம் அடைய வேண்டும் என்று இவர்கள் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

இதற்கு முந்தைய நாடாளுமன்ற அமர்வுகளிலும், உறுப்பினர்கள் ஜனநாயக ஆதரவு சுலோகங்களை எழுப்பியுள்ளனர். ஆனால், யாரும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை.

யார் இவர்கள்? அவர்கள் எவ்வாறு பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர்?

படத்தின் காப்புரிமை AFP
Image caption பெய்ஜிங்கிலிருந்து ஆளப்படும் முறையை அகற்ற வேண்டுமேன லியுங் குவோக்-ஹூங் பதவி பிரமாணம் எடுத்தபோது கூறினார்.

"லொங் ஹய்ர்" என்று அறியப்படும் லியுங் குவோக்-ஹூங் முன்னரே ஜனநாயக ஆதரவு அரசியல்வாதியாக திகழ்ந்து வருகிறார். அவர் பதவி பிரமாணம் எடுத்து கொண்டபோது, 2014 ஆம் ஆணடு போராட்டங்களின் அடையாளமாக ஒரு மஞ்சள் குடையை பிடித்து கொண்டு வேறுபட்ட தொனிகளில் வாசித்தும், வாசித்து முடித்ததும் ஜனநாயக ஆதரவு கோஷங்களை எழுப்பியும் பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டார்,

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தொலைக்காட்சி விவாதங்கள் வாக்காளர்களை கவர்ந்ததால் லவ் சியு-லாய் தேர்தலில் வெற்றிபெற்றார்

2014 ஆம் ஆண்டு "அம்ரெல்லா" போராட்டங்களில் பங்கேற்ற லாவ் சியு-லாய் ஒரு பல்கலைக்கழக பேராசிரியை.

அவர் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆறு வினாடிகள் மௌனம் காத்து பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். இந்த உறுதிமொழி பொருளின்றி இருப்பதால் அவ்வாறு செய்தததாக, பின்னர் முகநூலில் தெரிவித்திருந்தார்.

அவரது பதவி பிரமாணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் பதவி பிரமாணம் எடுக்க அனுமதிக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption நாதன் லா, 2014 ஆம் ஆண்டு போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களில் ஒருவர்

நாதன் லா, 2014 ஆம் ஆண்டு போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களில் ஒருவர். செப்டம்பர் மாதம் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும், மிகவும் குறைந்த வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் உறுப்பினராக புகழ்பெற்றிருக்கிறார்,

இவர் பதவி பிரமாணம் எடுப்பதற்கு முன்னதாக "என்னுடைய மனதை யாராலும் சிறைப்படுத்த முடியாது" என்று காந்தியடிகளின் வார்த்தைகளை சொன்ன பின்னர், பதவி பிரமாண உறுதிமொழியை எடுத்துகொண்டார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption பேராசிரியரான எட்வர்ட் இயு, தன்னுடைய பதவி பிரமாண உறுதிமொழியோடு ஜனநாயக ஆதரவு வார்த்தைகளையும் சேர்த்து கொண்டார்

பல்கலைக்கழக பேராசிரியரான எட்வர்ட் இயு, 2014 ஆம் ஆண்டு போராட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியவர்.

இவர் பதவி பிரமாண உறுதி மொழியோடு சேர்த்து "உண்மையான உலகளாவிய வாக்குரிமைக்காக போராடுவதாகவும் தெரிவித்தார்,

அவரது முதலில் எடுத்த பதவி பிரமாணம் நிராகரிக்கப்பட, பின்னர் மீண்டும் எடுத்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்.

அரசு ஏன் இப்போது நடவடிக்கை எடுக்கிறது?

படத்தின் காப்புரிமை AFP
Image caption எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் “சட்டப்படி செயல்பட வேண்டும்” என்று நீதி துறை செயலர் ரிம்ஸ்கை (வலது) தெரிவித்திருக்கிறார்

ஹாங்காங்கின் சட்டத்தில் மிகவும் அரிதான தலையீடு ஒன்றை சீன அரசு கடந்த மாதம் செய்திருக்கிறது. பொறுப்பானவாகளால் எடுக்கப்படும் பதவி பிரமாணங்கள் அதிபாரப்பூர்வ வார்த்தைகளிலிருந்து மாறாமல், கம்பீரமானதாகவும், தெளிவானதாகவும், முழுமையானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும் என்று சீனா திருத்தம் செய்திருக்கிறது.

சீனாவை மிகவும் கோபத்திற்கு உள்ளாக்கியிருக்கிற இரண்டு ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கும் முயற்சியாகவே பரவலாக இந்த நடவடிக்கை பாக்கப்படுகிறது.

ஹாங்காங்கின் நீதி துறையின் சுதந்திரத்தில் சீனா தலையிடுவதாக இதை பற்றி விமசகர்கள் கூறியிருக்கின்றனர்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கடமை இருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், தங்களுடைய பதவி பிரமாணத்தை வேறுபட்ட முறையில் கூறியதாக குற்றச்சாட்டிற்கு உள்ளான சில சீன ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன் என்று நீதி துறை செயலர் ரிம்ஸ்கை யுவன் இன்னும் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்