இத்தாலி பிரதமரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு

  • 4 டிசம்பர் 2016

இத்தாலியின் பிரதமர் மட்டயோ ரெண்ட்ஸியால் பரிந்துரைக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் அரசியலமைப்பு வாக்கெடுப்பில் இத்தாலியர்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இத்தாலி பிரதமர் மட்டயோ ரெண்ட்ஸி

அந்த மாற்றம் செனட்டின் அதிகாரத்தை குறைத்து, மத்திய அரசிற்கு அதிகப்படியான அதிகாரத்தை வழங்கும்.

வாக்கெடுப்பில் தோல்வியுற்றால், பதவி விலகுவதாக ரெண்ட்ஸி தெரிவித்துள்ளார்.

"இல்லை" என்று மக்கள் வாக்களித்தால், அது அரசியல் ஸ்திரமற்ற நிலையை தூண்டும் எனவும், இத்தாலியின் வங்கிகளில் பல கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் எனவும் பிற ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் அஞ்சுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இத்தாலியின் உறவை மறுமதிப்பீடு செய்ய விரும்பும் புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர இயக்கத்தால் "இல்லை" என்னும் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.