ஆஸ்ட்ரிய அதிபருக்கான மறு தேர்தல்: வெற்றிபெறுமா தீவிர வலது சாரிக் கட்சி?

ஆஸ்ட்ரியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலின் மறு தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வேட்பாளர்கள் இருவரும் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற போது

தீவிர வலது சாரி சுதந்திரக் கட்சியின் நோபேர் ஹூஃபர், ஐரோப்பிய ஆதரவு முன்னாள் சுற்றுச் சூழல் தொடர்பான கொள்கை கொண்ட கட்சியின் அரசியல்வாதி அலெக்சாண்டர் ஃபான் டேர் பெல்லனை எதிர்த்து போட்டியிடுகிறார்; கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் நெருக்கமாகவே இருந்தன.

ஆஸ்ட்ரிய அதிபர் என்னும் பதவி பெரும் அளவில் சம்பிரதாயப் பூர்வமான ஒன்று; ஹூஃபர் வெற்றி பெற்றால் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் தீவிர வலது சாரிக் கட்சியின் தலைவர் ஆவார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் ஃபான் டேர் பெல்லன், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

ஆனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக கூறி முடிவுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் மாதம் நடைபெறுவதாக இருந்த மறுதேர்தல் தபால் வாக்குகளின் பசை குறித்து ஏற்பட்ட பிரச்சனையால் தள்ளி வைக்கப்பட்டது.