கருத்தறியும் வாக்கெடுப்பில் தோல்வி - இத்தாலி பிரதமர் ராஜிநாமா

  • 5 டிசம்பர் 2016

இத்தாலியின் தற்போதைய அரசியமைப்பில் மேம்பாடுகளை கொண்டுவரும் நோக்கில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்த திட்டம் குறித்து நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும் தோல்வியடைந்ததால், இத்தாலியின் பிரதமர் மேட்டியோ ரென்சி பதவி விலகியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ரென்சி பதவி விலகல்

நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவாக எந்த வாக்கும் பதிவாகவில்லை என்ற தரப்பு மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் முன்னதாக தெரிவித்தன.

இத்தாலி பிரதமர் மேட்டியோ ரென்சி பரிந்துரைத்த மாற்றங்கள் மத்திய அரசை வலுப்படுத்தி, செனட் என்கிற நாடாளுமன்ற மேலவையை பலவீனப்படுத்தும்.

ஆனால், ரென்சியின் சொந்த கட்சியிலுள்ள சிலர் உள்பட பலர், இந்த மாற்றங்கள் பிரதமருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை வழங்கும் என்று வாதிட்டுள்ளனர்.

இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுகள், ஆட்சிக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து வந்த ஃபைவ் ஸ்டார் அமைப்பு தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு பெரும் வெற்றியாகும்.

தொடர்புடைய தலைப்புகள்