இத்தாலி: அரசியல் அமைப்பில் மேம்பாடு கொண்டு வர மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு

இத்தாலியின் மத்திய இடது சாரி கட்சியின் பிரதமர் மட்டயோ ரென்ஸியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters

இத்தாலியின் தற்போதைய அரசியல் அமைப்பில் மேம்பாடுகளை கொண்டுவரும் நோக்கில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

இந்த மாற்றங்கள் மத்திய அரசை வலுப்படுத்தி, செனட் என்கிற நாடாளுமன்ற மேலவையை பலவீனப்படுத்தும்.

வாக்கெடுப்பில் தோல்வியுற்றால், பதவி விலகுவதாக ரென்ஸி தெரிவித்துள்ளார்.

அவருடைய சொந்த கட்சியிலுள்ள சிலர் உள்பட, அரசியல் வட்டாரம் முழுவதும் பரந்த அளவிலான எதிர்ப்பை ரென்ஸி சந்தித்து வருகிறார்.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகும், பாசிச சர்வாதிகார அனுபவத்திற்குப் பிறகும் வேண்டுமென்றே வகுக்கப்பட்ட வரையறைகளை அகற்றிவிட்டு, அரசியல் வட்டாரத்தில் பிரதமருக்கு அதிக அதிகரங்களை இது வழங்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ரென்ஸி தோல்வியடைந்தால், இத்தாலியிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் புதிய அரசியில் ஸ்திரமற்ற நிலை ஏற்படக்கூடும்

தொடர்புடைய தலைப்புகள்