ஸ்காட்லாந்து: 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் காரில் இருக்கும் போது புகைப்பதற்கு தடை

ஸ்காட்லாந்தில் திங்கட்கிழமை முதல் ஒரு புதிய சட்டம் ஒன்று அமுலாகிறது. அதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் காரில் இருக்கும் போது புகைப்பது சட்ட விரோதமாகிறது.

படத்தின் காப்புரிமை PA
Image caption ஸ்காட்லாந்து: 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் காரில் இருக்கும் போது புகைப்பதற்கு தடை

புகைபிடிப்பவர்கள் வெளியேற்றும் புகையிலுருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டமானது ஒருமனதாக ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் 2015ல் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், புகைபிடிப்பவர்களின் உரிமைகளுக்கான பிரசாரகர்கள், இந்த மாற்றத்தை பயனில்லாத நல்லொழுக்க சமிக்ஞை என்று இதனை நிராகரித்துள்ளனர்.

புகைப்பிடிப்பவர்கள் வெளியேற்றும் புகையில் நச்சுத்தன்மை நிறைந்த ரசாயனங்கள் இருப்பதாகவும், அது குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தாக அமைவதாகவும் பொது சுகாதாரத்துறை அமைச்சர் அலீன் காம்ப்பெல் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டத்தை மீறி செயல்படுவோர் சுமார் 1,000 பவுண்ட்கள் வரை அபராதம் கட்ட நேரிடலாம்.