த ஹேக்: குழந்தை படைவீரர்களை உருவாக்கியதற்காக கிளர்ச்சிப்படை தளபதி மீது குற்றச்சாட்டு

உகாண்டாவின் கிளர்ச்சிப் படையான லாட்ஸ் தற்காப்பு படையின் தளபதி ஒருவர் த ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.சர்தேச நீதிமன்றம் விசாரணை நடத்தும் முதலாவது குழந்தை வீர்ர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Reuters

உகாண்டாவின் வடக்கு பகுதியில் நடைபெற்ற கொலை, அடிமைத்தனம் மற்றும் பாலியல் வல்லுறவு உள்பட, 70 போர் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றஞ்சாட்டுக்களில் தான் ஈடுபடவில்லை என டொமினிக் ஆங்வென் தெரிவித்திருக்கிறார்.

தானே லாட்ஸ் தற்காப்பு படையால் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்திருக்கும் டொமினிக், இவையனைத்தும் லாட்ஸ் தற்காப்பு படை மீதான குற்றச்சாட்டுக்களே தவிர தன் மீதானதல்ல என்று கூறியிருக்கிறார்.

சிறுவனாக இருந்தபோதே கிளாச்சியாளர்களால் கடத்தப்பட்ட டொமினிக் ஆங்வென், அவரை அடக்கி ஆண்டவர்களின் தோற்றத்திலேயே வளர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோதத்துவ பரிசோதனைகளே மேற்கொள்வதற்காக, தன் மீதான விசாரணையை இடைநிறுத்த வேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்