புர்கா அணிவதற்கு தடை- ஜெர்மனி சட்டப்படி கருத்து

முகம் முழுவதையும் மூடிக்கொள்ளும் துணியை அணிவதற்கு தடைவிதிப்பது ஜெர்மனியில் சட்டப்படி சாத்தியமாகும் என்று சான்சிலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

சில முஸ்லிம் பெண்கள் புர்காவை அணிவதை போல, தங்களுடைய முகம் முழுவதையும் மூடி கொள்வது ஜெர்மனி கலாசாரத்தில் பெண்களுக்கு பொருத்தமானது அல்ல என்று அவருடைய கட்சியின் மாநாட்டில் பேசியபோது தெரிவித்திருக்கிறார்.

இந்த கொள்கை அமலானால், புர்கா அணிவதை முற்றிலுமாக தடை செய்யாமல், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற இடங்களில் மட்டும் பெண்கள் முகத்தை மூடிக் கொள்ளும் ஆடைகள் அணிவது தடைசெய்யப்படும்.

இத்தகையதொரு முக்கிய உரையில் இதுபோன்ற கருத்துக்களை சான்சலர் மெர்கல் கூறுவது இதுவே முதல்முறை என்று பெர்லினில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

சன்சலர் மெர்கலின் குடியேறிகள் பற்றிய கொள்கையால் மக்களிடம் உருவாகியிருக்கும் மனநிறைவின்மையை ஆதாயமாக்கியிருக்கும் ஜெர்மனிக்கு மாற்று கட்சியாக பர்க்கப்படும், வலது சாரி ஜனரஞ்சக கட்சியிடம் இருந்து வருகின்ற சவால்களை சந்தித்து வருகின்ற நிலைமையில், மெர்கலுடைய இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்