மனித குலத்திற்கு எதிரான குற்றத்தில் 8 போசினிய செர்ப் படையினர் கைது

  • 6 டிசம்பர் 2016

1990 ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது சிறுவர்கள் மற்றும் ஆண்கள் உள்பட 120 பேரை கொலை செய்ததாக சந்தேகத்திற்குரிய 8 போசினிய செர்ப் படையினரை, காவல்துறையினர் கைது செய்திருப்பதாக போஸ்னிய ஆட்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP

மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைதாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட போஸ்னிய முஸ்லிம்களும், குரோஷிய கத்தோலிக்கர்களும் போஸ்னிய போருக்கு பின்னர் பிரிஜிடோர் என்ற நகரின் அருகில் இருந்த பொது சவக்குழியில் கண்டறிப்பட்டனர்.

போஸ்னிய செர்ப் தளபதி மீதான விசாரண, தி ஹேக்கில் இருக்கின்ற யூகோஸ்லாவிய போர் குற்ற தீர்ப்பாயத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்