இந்தோனீஷியாவில் பூகம்பம் தாக்கிய அச்சேவில் மீட்பு பணிகள் மீண்டும் துவக்கம்

  • 8 டிசம்பர் 2016

இந்தோனீஷியாவில் கடந்த புதன்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் மழை காரணமாக நிறுத்தப்பட்ட தேடுதல் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆயிரக்கணக்கான அவசர உதவிப் பணியாளர்கள், வீரர்கள் மற்றும் போலிசார் உயிர் பிழைத்தவர்களை மீண்டும் தேடத் தொடங்கியுள்ளனர்.

அச்சே மாகாணத்தில் உள்ள பிடி ஜெயாவில் கட்டட இடிபாடுகளுக்கிடையில், உயிர் பிழைத்தவர்கள் இருக்கிறார்களா என்பதை கண்டறிய வெட்டி எடுக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுவரை சுமார் 100 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 600 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்