இராக்கில் ஐ.எஸ் நிலைகள் என்று கருதி தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 63 பேர் பலி

இராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் வசமுள்ள நகர் மீது நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதல் ஒன்றில் தவறுதலாக டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இராக்கில் ஐ.எஸ் நிலைகள் என்று கருதி தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 63 பேர் பலி

இந்த தாக்குதலில் 63 பேர் பலியாகி இருப்பதாகவும், அதில் பாதி பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று சிரியா எல்லைக்கு அருகே உள்ள அல் கயிமிலிருந்து மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.எஸ் குழுவின் தலைமையகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கருதி ஒரு மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறாக முடிந்துவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

மசூதிக்கு பதிலாக மக்கள் கூட்டம் மிகுந்த சந்தைப் பகுதி ஒன்று தாக்குதலுக்கு உள்ளானது.

அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினரும் மற்றும் இராக் விமானப் படையினரும் ஐ.எஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர்களில், இந்தக் குறிப்பிட்ட தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்ற விவரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்