கோஹினூர் வைரம் -- ஆறு கட்டுக்கதைகள்

  • 10 டிசம்பர் 2016

உலகிலேயே விலை மதிக்க முடியாத வைரமாக கோஹினூர் வைரம் நம்பப்படும் நிலையில், "உலகின் மிகவும் பிரபலமற்ற வைரம்" என்ற தலைப்பில் வெளியான புத்தகத்திலுள்ள கோஹினூர் வைரம் பற்றிய ஆறு கட்டுக்கதைகளை உங்களுக்கு அறி தருகின்றோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

கோஹினூர் வைரம் உலகிலுள்ள வைரங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக விளங்குகிறது.

மொகலாய அரசர்கள், இரானியப் படையினர், ஆப்கன் ஆட்சியாளர்கள், பஞ்சாப் மகாராஜாக்கள் ஆகியோரின் கைகளை கடந்து வந்துள்ள கோஹினூர் வைரம், பல நூற்றாண்டுகளாக கைப்பற்றப்படுகின்ற மற்றும் சூழ்ச்சியால் அடையக்கூடிய ஒரு பொருளாக இருந்து வந்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்த 105 காரட் ரத்தினக்கல் ஆங்கிலேயரின் கைகளில் வீழ்ந்தது. 'டவர் அஃப் லண்டன்' என்றறியப்படும் கோட்டை அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும் மணிமகுட ஆபரணத்தின் ஒரு பகுதியாக அது இப்போது உள்ளது.

ஆங்கிலேயர்களால் இந்தியாவிலிருந்து திருடப்பட்டு இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படும் இந்த ரத்தினக்கல் யாருக்கு சொந்தமானது என்ற வியடம், பல இந்தியருக்கு இன்றும் ஒரு உணர்ச்சிபூர்வ பிரச்சனையாகவே உள்ளது.

கோஹினூர் வைரம் பற்றி வில்லியம் டால்ரிம்பிளும் அனிதா ஆனந்தும் "உலகின் மிகவும் பிரபலமற்ற வைரம்" என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தை 'ஜக்கர்னாட்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

விக்டோரியா அரசியின் கிரீடத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல தடை

விலை மதிக்க முடியாததாக நம்பப்படுகின்ற இந்த வைரக்கல் பற்றி புனையப்பட்ட கட்டுக்கதைகளை பற்றி இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.

1849 ஆம் ஆண்டு இந்த கோஹினூர் வைரம் தலைமை ஆளுநர் டல்ஹௌசி பிரபுவிடம் கிடைத்தபோது, அந்த ரத்தினக்கல்லின் அதிகாரபூர்வ வரலாற்றுடன் விக்டோரியா அரசிக்கு அதனை அனுப்ப அவர் தயாரானார்.

எனவே, இந்த ரத்தினக்கல் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் பணிக்காக டெல்லியில் சூதாட்டம் மற்றும் கேளிக்கைகளில் ஈடுபாடு கொண்ட ஓர் இளைய உதவி நீதிபதியான தியோ மெட்கால்ஃபேயை டல்ஹௌசி பிரபு நியமித்தார்.

ஆனால், மெட்கால்ஃபே மக்களிடம் வலம் வந்த வண்ணமயமான கிசுகிசுப்புக்களுக்கு அதிகமாகவே அந்த வைரம் பற்றி சேர்த்து கொண்ட தகவல்கள் தான், அதற்கு பிறகு வந்த அனைத்து கட்டுரைகளிலும், புத்தகங்களிலும் திரும்ப திரும்ப குறிப்பிடப்படுகின்றன.

விக்கிப்பீடியாவில் கூட, கோஹினூர் பற்றிய இந்த புனைகதைகள் கேள்விக்குள்ளாக்கப்படாமல் இன்று வரை சேர்க்கப்பட்டிருக்கின்றன.

கோஹினூர் வைரம் பற்றி இந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆறு முக்கிய கட்டுக்கதைகள்:

கட்டுக்கதை 1:கோஹினூர் வைரம் ஒப்புயர்வற்ற இந்திய வைரம்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அரசியின் தாயால் அணியப்பட்ட இந்த ஆபரணம், அவருடைய இறுதிச் சடங்கின்போது, சவப்பெட்டியின் மீது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது

உண்மை: 190.3 மெட்ரிக் காரட் எடையுடைய இந்த கோஹினூர் வைரம் பிரிட்டனை சென்றடைந்தபோது, அதனோடு ஒப்பிடக்கூடிய இரண்டு 'சகோதர' வைரங்கள் இருந்தன.

ஒன்று, தாரியாநூர், அல்லது ஒளிக்கடல். இப்போது தெஹ்ரானில் உள்ளது. 175-195 மெட்ரிக் காரட் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

இரண்டு, மொகலாயப் பேரரசின் வைரம். மிகவும் நவீனமானதான ஓர்லோவ் வைரம் என்று ரத்தினக்கல் நிபுணர்களால் நம்பப்படுகிறது. இது 189.9 மெட்ரிக் காரட் எடையுடையது.

1739 ஆம் ஆண்டு இரானிய ஆட்சியாளர் நாடெர் ஷா இந்தியாவை ஆக்கிரமித்த பின்னர் கொள்ளையடித்து சென்றதன் ஒருபகுதியாக, இந்த மூன்று வைரங்களும் இந்தியாவை விட்டு சென்று விட்டன.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோஹினூர் வைரம் பஞ்சாபை வந்தடைந்தபோது தான், அதன் ஒப்புயர்வற்ற தன்மையையும், நட்சத்திர தகுநிலையையும் இந்த வைரம் எட்டியது.

கட்டுக்கதை 2:கோஹினூர் வைரம் குறைபாடில்லாதது

படத்தின் காப்புரிமை Royal Collection Trust/Bridgeman Images
Image caption கோஹினூர் வைரத்தோடு இருக்கும் உடை ஊசியை அணிந்திருக்கும் விக்டோரியா அரசி

உண்மை: அசலான வெட்டப்படாத கோஹினூர் வைரத்தின் மையமே குறைபாடுடன்தான் இருந்தது .

ஒரு தளம் வழியாக அதன் மையத்தில் பெரியதாக இருந்த மஞ்சள் வண்ண கறை, ஒளிவிலக செய்யும் அதனுடைய திறனை தடுத்தது.

அதனால் தான், விக்டோரியா அரசியின் கணவரான ஆல்பர்ட் இளவரசர் அதனை திரும்பவும் வெட்ட மிகவும் ஆர்வமாக இருந்தார்.

கோஹினூர் வைரம் உலகிலேயே மிகவும் பெரிய வைரம் என்ற நிலையில் இருந்து வெகுதொலைவில் உள்ளது. அது மிக பெரிய வைரங்களில் 90-வது இடத்தையே பெறுகிறது.

உண்மையில், டவர் அஃப் லண்டன் அரண்மனையில் இதனை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள், இது இவ்வளவு சிறியதாகவா இருக்கிறது என்று பார்த்து ஆச்சரியமடைகின்றனர். குறிப்பாக அதற்கு அருகில் காட்சியளிக்கும் மிகவும் பெரிய கல்லினான் வைரங்களோடு ஒப்பிடுகையில், அது மிகவும் சிறியதாகவே தோன்றுகிறது.

கட்டுக்கதை 3: கோஹினூர் வைரம் 13 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் கொல்லூர் சுரங்கத்தில் இருந்து வந்தது.

படத்தின் காப்புரிமை Hulton Archive/Getty Images

உண்மை: கோஹினூர் வைரம் எங்கு, எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றி அறிய வாய்ப்பில்லை. அதனால், இது மர்மமான ரத்தினக்கல்லாக உள்ளது.

இந்து மதத்திலுள்ள பல கடவுள்களில் மிகவும் பிரபலமான ஒருவரான கிருஷ்ணா பற்றிய பகவத் புராண கதைகளில் இருக்கும் சயாமான்தாகா ரத்தினக்கல் தான் உண்மையிலேயே கோஹினூர் வைரம் என்று கூட சிலர் நம்புகின்றனர்.

தியோ மெட்கால்ஃபேயின் அறிக்கையின்படி, "கிருஷ்ணாவின் வாழ்க்கை காலத்தில் இருந்தே இந்த வைரத்தின் வடிமம் எடுக்கப்பட்டதாக" இந்த வைரம் பாரம்பரியத்தை கொண்டுள்ளது.

இந்த வைரம் சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதல்ல என்பது நமக்கு நிச்சயமாக தெரிகிறது. ஆற்றுப்படுகையிலிருந்து இது எடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலுள்ள ஆற்றுப்படுகையாக அது இருக்கலாம்.

இந்திய வைரங்கள் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படவில்லை. ஆனால், உலர் ஆற்றுப்படுகைகளின் வண்டல் படிவுகளில் இருந்து கண்டெடுக்கப்படுபவை ஆகும்.

கட்டுக்கதை 4: கோஹினூர் வைரம் மோகலாய மன்னர்களின் மிகவும் விலை உயர்ந்த பொக்கிஷம்.

படத்தின் காப்புரிமை PVDE/Bridgeman Images
Image caption ஹூமாயுன் உடனிருக்கையில் திமுர் அரச மணிமுடியை பாபருக்கு வழங்குகிறார். ஹூமாயுனுக்கு வழங்கப்பட்ட பாபரின் புகழ்பெற்ற வைரம் கோஹினூர் வைரமாக இருக்கலாம்

உண்மை: இந்துக்களும், சீக்கியர்களும் பிற ரத்தின கற்களை விட வைரங்களை விலை உயர்ந்ததாக கருதும் வேளையில், மொகலாயர்களும் பாரசீகர்களும் பெரிய, வெட்டப்படாத, நல்ல நிறத்திலான கற்களை விரும்பினர்.

மொகலாய கருவூலத் தில், ரத்தின கல் சேமிப்புக்களில் அசாதாரணமானவைகளாக எடுத்துகாட்டப்படும் பலவற்றில் ஒன்றாகத்தான் கோஹினூர் வைரமும் இருந்தது. அந்த கருவூலத்தில் மிகவும் மதிக்கப்பட்ட கற்களாக இருந்தவற்றில் பல வைர கற்கள் அல்ல. ஆனால், மொகலாயர்கள் மிகவும் விரும்பிய படக்ஷானிலிருந்து வந்த சிவப்பு வண்ண கற்களும், அப்போதைய பர்மாவின் (தற்போதைய மியான்மாரின்) ரூபி ( பவழம்) கற்களும் தான்.

உண்மையில், கோஹினூர் வைரம் என்று பரவலாக அறியப்பட்ட பாபரின் வைரத்தை மொகலாய பேரரசர் ஹூமாயுன், பாரசீக மன்னர் ஷா தாமாஸ்ப்புக்கு தான் நாடு கடந்து வாழ்ந்தபோது பரிசாக வழங்கினார்.

படிப்படியாக தக்காண பகுதிக்கு திரும்பிய பேரரசர் பாபரின் இந்த வைரம், பிறகு எப்படி அல்லது எப்போது மொகலாய அரச அவைக்கு வந்து சேர்ந்தது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

கட்டுக்கதை 5: தலைப்பாகை மாற்றுகின்ற சடங்கில் மொகலாய பேரரசர் முகமது ஷா ரன்கீலாவிடம் இருந்து கோஹினூர் வைரம் திருடப்பட்டது.

படத்தின் காப்புரிமை Akg-images/Pictures from history
Image caption அதிக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மயில் அரியணையில் வீற்றிருக்கும் ஷாஜஹான்

தன்னுடைய தலைப்பாகையிலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்த வைரத்தை மொகலாய பேரரசர் அறியாமல் இருப்பதற்கு நாடெர் ஷா உடந்தையாக இருந்ததாக பிரபல கதை ஒன்று உள்ளது.

ஆனால் இது ஒரு ஏதோ தலைப்பாகையில் தளர்ச்சியாக வைக்கப்பட்டு, தலைப்பாகையிலிருந்து தனியே எடுத்துவிடக்கூடிய ஒரு பொருளல்ல; அதை நாதிர் ஷா தந்திரமாக தலைப்பாகையை மாற்றுவதன் மூலம் பெற்றுவிட முடியாது.

பாரசீக வரலாற்று ஆசிரியரின் சாட்சிய ஆவணத்தின்படி, பேரரசர் இந்த ரத்தின கல்லை அவருடைய தலைப்பாகையில் மறைத்து வைத்திருக்கமாட்டார். ஷாஜகானின் மயில் அரியணை அதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் சிறந்த, அதிக செலவில் செய்யப்பட்ட பொருளாக இருந்தது தான் இதற்கு காரணமாகும்.

இந்த வரலாற்று ஆசிரியரின் ஆய்வு படி, கோஹினூர் வைரம் என்கிற ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படாத பெயர், முதன்முதலில் சொல்லப்பட்டிருப்பது, மயிலின் தலையில் அமைக்கப்பட்டிருந்த அசாதாரணமான அரியணையின் முகட்டில் இடம் பெற்றிருந்தது.

கட்டுக்கதை 6: வெனீஷிய வைரம் வெட்டுபவரும், ரத்தின கல்லை வழவழப்பு செய்பவருமான ஒருவர், நளினமற்ற முறையில் கோஹினூர் வைரத்தை வெட்டிவிட்டதால், அது சிறிதாகி விட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

உண்மை: மொகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பால் அவருடைய தனிப்பட்ட ஆபரண சேமிப்புக்களை பார்க்க அனுமதியளிக்கப்பட்ட பிரான்ஸ் ரத்தின கல் வியாபாரியும், பயணியுமான ஷான்-பாப்டிஸ்ட் டவர்னியே-வின் கூற்றுப்படி, ரத்தினக் கல் வெட்டுபரான, ஹோர்டென்சியோ போர்ஜியோ உண்மையிலேயே பெரிய வைரத்தை மோசமாக வெட்டியதில் அதனுடைய அளவு சிறிதாகிவிட்டது என்கிறார்.

ஆனால், வைர வியாபாரி மிர் ஜூம்லா மொகலாய பேரரசர் ஷாஜகானுக்கு பரிசாக வழங்கப்பட்டஇந்த வைரமே, மக மொகலாய வைரம் என்று அவர் இனம் கண்டுள்ளார்.

உண்மையில் மகா மொகலாய பேரரசின் வைரம் என்பது , கிரெம்ளினிலுள்ள ரஷ்ய அரசி கேத்தரினின் செங்கோலின் ஒரு பகுதியான, ஓர்லோவ் வகையை சேர்ந்தது என்று நவீன கால நிபுணர்களில் பலர் ஏற்றுகொள்கின்றனர்.

மகா மொகலாய பேரரசின் வைரங்கள் அனைத்தும் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்ட நிலையில், வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தியாவின் அசாதாரண வைரங்கள் பற்றிய குறிப்புகள் எல்லாம் கோஹினூர் வைரத்தை குறிப்பிடுவதாக எண்ணப்படும் நிலை தோன்றியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்