கிரீட் வில்டர்ஸ் பாகுபாட்டை தூண்டியதாக ஆம்ஸ்டர்டாம் நீதிமன்றம் தீர்ப்பு

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த , இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்வாதியான கிரீட் வில்டர்ஸ் பாகுபாட்டை தூண்டியதாக ஆம்ஸ்டர்டாம் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

மோராக்கோ மக்களை ஒரு குழுவாக அவர் நிந்தித்திருப்பதாக அது கூறியுள்ளது.

இன வெறுப்புணர்வை தூண்டியதாக குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்திருக்கும் நீதிமன்றம், இந்த தீர்ப்பே போதுமானது என்று கூறி தண்டனை வழங்கவில்லை.

நீதிபதிகள் தனக்கும், பாதி நெதர்லாந்து மக்களுக்கும் தண்டனை வழங்கியிருப்பதாக தன்னுடைய டிவிட்டர் பதிவில் வில்டர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இதனை பைத்தியகாரத்தனம் என்று கூறியிருக்கும் அவர், இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய போவதாக குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA

அடுத்த மார்ச் மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இவருடைய சுதந்திர கட்சி முன்னிலை பெற்றிருப்பதாக கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

இந்த குற்றச்சாட்டுகள் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தல்களோடு தொடர்புடையதாகும்.

ஒரு கூட்ட ஆதரவாளர்களை உசுப்பேற்றி, நெதர்லாந்தில் குறைவான மோராக்கோ மக்களே இருக்க வேண்டும் என்று மந்திரம் போல வில்டர்ஸ் உச்சரிக்க செய்திருந்தார்.

இதனை தன்னுடைய கட்சி பார்த்து கொள்ளும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்