லுஃப்தான்சா நிறுவனத்துடன் ஜெர்மன் விமானிகள் சங்கம் மீண்டும் பேச்சுவார்த்தை

ஜெர்மனின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுஃப்தான்சா உடன் அந்நாட்டின் விமானிகளின் சங்கமானது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஒப்பு கொண்டுள்ளது. மேலும், பேச்சுவார்த்தை முடியும் வரை அனைத்து வேலை நிறுத்தங்களையும் கைவிடவும் ஒப்பு கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை CHRISTOF STACHE
Image caption லுஃப்தான்சா நிறுவனத்துடன் ஜெர்மன் விமானிகள் சங்கம் மீண்டும் பேச்சுவார்த்தை

லுஃப்தான்சா சமீபத்தில் தர ஒப்புக்கொண்டுள்ள ஊதியத்திட்ட்த்தை, தாங்கள் பரீசிலித்துக்கொண்டிருப்பதாக அறிக்கை ஒன்றில் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், சங்கத்தை சேர்ந்த விமானிகள் நடத்திய 6 நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் லாபத்தில் சுமார் நூறு மில்லியன் டாலர்கள் லாப இழப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.