பல்கேரியாவில் வாயு சரக்கு ரயில் தடம்புரண்டு வெடித்து சிதறி 4 பேர் பலி

பல்கேரியாவில் புரொப்பேன் வாயுவை ஏற்றி சென்ற சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு வெடித்து சிதறியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP

அதிகாலைக்கு முன்னரே நடைபெற்ற இந்த வெடிவிபத்தில், வட கிழக்கு கிராமமான ஹிட்டிரினோவில் மக்கள் தூங்கி கொண்டிருந்தபோதே அருகிலிருந்த வீடுகளில் தீ பரவியது.

படத்தின் காப்புரிமை AP

மக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட அதிகாரிகள் உத்தரவிட்டனர். தீயை அணைப்பதிலும், உயிர் தப்பியோரை தேடுவதிலும் 100 தீயணைப்பு வீரர்களுக்கு மேல் ஈடுபட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

அந்த ரயில் தடம்புரண்டபோது, எரிவாயு நிரம்பியிருந்த 24 கொள்கலன்களில் கடைசி இரண்டு, மின் கம்பியொன்றில் மோதியதாக காவல்துறை செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்