தென் கொரியா மீது தாக்குதல் நடத்த வட கொரியா திட்டமா?

வட கொரியாவின் தலைவர் கிம் ஜங்கின், தென் கொரிய அதிபரின் அதிகாரப்பூர்வ இருப்பிடமான புளு ஹவுஸை தாக்குவதற்கான ராணுவ போர் பயிற்சியை மேற்பார்வையிடுவதை போன்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வட கொரியாவின் தலைவர் கிம் ஜங்கின்

வட கொரியாவின் தொழிலாளர் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்திதாளின் முதல் பக்கத்தில், கின் ஜங்கின், பைனாக்குலர்கள் மூலம் பார்ப்பது போலவும், அவரின் ராணுவப் படையினர் புளு ஹவுஸை போன்று தோற்றமளிக்கும் பெரிய கட்டடத்தை தாக்குவது போலவும், அதைப் பார்த்து கிம் ஜங்கின் வெளிப்படையாக சிரிப்பது போலவும் படங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் தென் கொரிய நாடாளுமன்றத்தில் தென்கொரிய அதிபர் பாக் கன் ஹே மீது குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

தென் கொரியாவில் ஏற்படும் இந்த மாற்றத்தை வட கொரியா தனது எதிரி நாட்டின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பாக பார்க்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.