நைஜீரியா: கூரை இடிந்த தேவாலய ஒப்பந்தத்தாரரை கைது செய்ய மாநில ஆளுநர் உத்தரவு

கூரை இடிந்து விழுந்த தேவாலயத்தின் கட்டுமானப் பணிகளுக்கு பொறுப்பான ஒப்பந்தத்தாரரை கைது செய்ய, நைஜீரியாவின் தென் கிழக்கிலுள்ள அக்வா இபோம் மாநிலத்தின் ஆளுநர் யுடோம் இம்மானுவேல் ஆணையிட்டுள்ளார்.

குறைந்தது 100 உடல்கள் சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இறந்தோரை மருத்துவமனையில் வைக்கின்ற இந்த நகர சவக் கிடங்குகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று உள்ளூர் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ஆயர் ஒருவரை திருப்பொழிவு செய்கின்ற வழிபாட்டின்போது, தேவாலயத்தில் இருந்த மக்கள் மீது கூரை இடிந்து விழுந்தது.

அந்த வழிபாடு தொடங்குவதற்கு முன்னால், கட்டுமான தொழிலாளர்கள் சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க முனைந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நைஜீரிய அதிபர் முகமுது புகாரி இதற்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்திருக்கிறார்.

தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்துவது, கட்டட விதிமுறைகளை மீறுவது ஆகியவற்றால், கட்டடங்கள் இடிந்து விழுவது நைஜீரியாவில் பொதுவாக நடக்கும் நிகழ்வுகளாகும்.

தொடர்புடைய தலைப்புகள்