காம்பியா: தேர்தல் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிபர் தரப்பில் முறையீடு

  • 11 டிசம்பர் 2016

காம்பியா அதிபர் யாக்யா ஜமே தனது தேர்தல் தோல்வியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வார் என்று அதிபரின் கட்சி தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Image copyrightREUTERS/AFP
Image caption அடாமா பாரோ மற்றும் யாக்யா ஜமே

இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அடாமா பாரோ வெற்றி பெற்றதாக சுயாதீனமாக செயல்படக்கூடிய தேர்தல் ஆணையமானது அறிவித்தது.

ஜமே முதலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பாரோவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமையன்று, தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாக உரையாற்றினார்.

ஜமேவின் இந்த மனமாற்றம் ஐக்கிய நாடுகள் மற்றும் ஆஃப்ரிக்க ஒன்றியத்தால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.