பிரிட்டனில் பயங்கரவாதத் தடை சட்டங்களின் கீழ் தீவிர வலதுசாரி இயக்கத்திற்கு தடை விதிப்பு

ஒரு பிரிட்டீஷ் நவ நாஜீக்கள் இயக்கம் பிரிட்டனில் பயங்கரவாதத் தடை சட்டங்களின் கீழ் தடை செய்யப்படவிருக்கும் முதல் தீவிர வலதுசாரி இயக்கமாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை national-action.info

இந்த குழுவிற்கு தடைவிதிக்க நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த குழுவில் சேருவதோ அல்லது ஆதரவு தெரிவிப்பதோ கிரிமினல் குற்றமாகும்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் தீவிர வலதுசாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒரு நிறுவனமானது தடை செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட், நேஷனல் ஆக்‌ஷன் என்ற இந்த அமைப்பு, இனவெறித் தன்மை கொண்ட்து, யூத எதிர்ப்பு சித்தாந்த்த்தை பின்பற்றுவது மற்றும் ஒருபாலுறவுகாரர்களுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸ் கொல்லப்பட்ட போது, இந்த குழுவை சேர்ந்த ஒரு கிளை கொலையாளியை புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்