அலெப்போ போர்நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா பொய் கூறுகிறது - பிரான்ஸ் குற்றச்சாட்டு

சிரியாவின் அலெப்போ நகரில் போர்நிறுத்தத்தை உருவாக்க தயாராக இருப்பது பற்றி ரஷ்யா தொடர்ந்து பொய் கூறி வருவதாக பிரான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

போர்நிறுத்தம் பற்றி கலந்தாய்வு செய்ய ஆர்வமாக இருப்பதாக ரஷ்யா கூறிகொள்கிறது. ஆனால், அலெப்போவை கைப்பற்றுவதை இலக்காகவும், அதிபர் பஷார் அல் அசாத்தின் அரசை காப்பாற்றும் நோக்கிலும் போரை தொடருவதாகவும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஷான் மார்க் ஐரோ கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

"தொடர்ந்து பொய் கூறுபவர்கள் என்று பொருளில் இரட்டை பேச்சு" என அவர் அழைத்திருக்கின்ற குற்றம் இழைப்பவர்களாக ரஷ்யர்கள் உள்ளனர் என ஐரோ தெரிவித்திருக்கிறார்.

அலெப்போவின் கிழக்கு பகுதி முழுவதையும் கைப்பற்றும் நிலையில் அரசு படை

இந்த வார இறுதியில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடைபெற்ற இன்னொரு பேச்சுவார்த்தை, போர்நிறுத்தம் பற்றி எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது.