துருக்கியில் இரட்டை குண்டு தாக்குதலை தொடர்ந்து 235 பேர் கைது

தடைசெய்யப்பட்ட பிகேகே எனப்படும் குர்து இன ஆயுதக்குழுவினர் சார்பாக செயல்பட்ட மற்றும் பயங்கரவாதக் கருத்துக்களை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள 230க்கும் மேற்பட்டோரை நாடு முழுவதும் கைது செய்திருப்பதாக துருக்கி ஆட்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாக இருப்பதும், குர்து ஆதரவு முக்கிய கட்சியுமான, குர்து இன மக்களின் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டோரில் அடங்குகின்றனர்.

காவல்துறையினரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அதிபர் எர்துவான்

துருக்கி அரசு பிகேகே கட்சி மீது குற்றம் சுமத்திய சனிக்கிழமையன்று இஸ்தான்புல்லில் நடைபெற்ற 44 பேர் கொல்லப்பட்ட இரட்டை குண்டு தாக்குதலை தொடர்ந்த இந்த கைது நடவடிக்கை வந்திருக்கிறது. இத்தாக்குதலுக்கு பிகேகே மீது அரசு பழி சுமத்தியிருந்த்து.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 44 பேர் கொல்லப்பட்ட இரட்டை குண்டு தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதக் குழுவோடு தொடர்படைதாக 235 பேர் கைது

சட்டபூர்வ அரசியல் கட்சி ஒன்றுக்கு எதிராக அதிகரித்துவரும் அளவில் சர்வாதிகாரப் போக்குடைய அரசு எடுக்கின்ற எதிர்வினையை இந்த கைதுகள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இதனை விமர்சகர்கள் கூறுகின்றனர்.

துருக்கி நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கபோவதாக எதிர்க்கட்சி அறிவிப்பு

சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலை பிகேகே கட்சிக்கு மிகவும் நெருக்கமான டிஎகே எனப்படும் குர்து இன ஆயுதக்குழு நடத்தியதாக ஒப்பு கொண்டுள்ளது.

துருக்கி பற்றி அதிகம் வாசிக்க

துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது ரசாயன ஏவுகணை வீச்சு, 22 பேர் காயம்

சிரியாவில் துருக்கி ராணுவத்தைச் சேர்ந்த மூன்று படையினர் கொலை

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு துருக்கி அதிபர் ரெஜீப் தாயிப் எர்துவன் எச்சரிக்கை

நேட்டா படையில் பணிபுரியும் நாடுகளில் தஞ்சம் கோரும் துருக்கி ராணுவத்தினர்

இராக் எல்லையில் துருக்கி ஆயுதங்கள் குவித்து தயார் நிலை

தொடர்புடைய தலைப்புகள்