தெய்வ நிந்தனை தொடர்பான குற்றச்சாட்டு: விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ள ஜகார்த்தா ஆளுநர்

இந்தோனீசிய தலைநகரான ஜகார்தாவின் ஆளுநர் தெய்வ நிந்தனை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்படும் விசாரணை ஒன்றில் ஆஜராக உள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தெய்வ நிந்தனை குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஜகார்த்தா ஆளுநர் பூரனாமா

ஒரு அரசியல் கூட்டத்தில் உரையாற்றும் போது, இஸ்லாமிய புனித நூலான குரானை அவமதித்ததாக கிறிஸ்துவ இனத்தை சேர்ந்த அஹோக் என்றழைக்கப்படும் ஜகார்த்தா ஆளுநர் பஸுகி சாஹியா அ பூரனாமா மீது குற்றம்சாட்டப்பட்டது.

சர்ச்சையை உருவாக்கிய தனது கருத்துக்களுக்காக ஆளுநர் பூரனாமா மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

ஆளுநர் பூரனாமா நீதிமன்றத்தில் ஆஜராகும் போது திரண்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இஸ்லாமிய ஆர்பாட்டக்காரர்களை சமாளிக்க நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில், ஜகார்தாவின் ஆளுநர் பூரனாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜகார்த்தா ஆளுநர் மீது நடக்கும் இந்த வழக்கு விசாரணை, உலகில் மிக அதிகளவு முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனீசியாவில் மத ரீதியான பதற்றத்தை தூண்டியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்